IRAVINGU THEEVAI

 இரவிங்கு தீவாய்



Movie: 96

Singers:Chinmayi, Pradeep kumar 

Music director: Govind vasantha


பெண்: இரவிங்கு தீவாய் நமை சூழுதே..
விடியலும் இருளாய் வருதே..
நினைவுகள் தீயாய் அலை மோதுதே..
உடல் இங்கு சாவாய் அழுதே..

ஆ&பெ: பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்..
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்..

ஆண்: மலைகளின் நதி போல் மனம் வழிந்து வந்தாய்..
வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்..
கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்..

ஆண்: இரவிங்கு தீவாய் நமை சூழுதே..
விடியலும் இருளாய் வருதே..

பெண்:  இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே..
அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயுதே..
ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே..

ஆ&பெ: அட காலங்கள் தடை மீறி தடை போடுதே..
நீயின்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா வாழ்வே வா நீதான் உயிரின் உயிரே வரவா வரவா..

ஆண்: தினம் தினம் உயிர்த்தெழும் மனம் அன்றாடம் மாயுமே..
உயிர் வரை நிறைந்துனை மனம் கொண்டாடி வாழுமே..
மரங்கள் சாய்ந்து கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே..
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும் நிலவு பொறுமை காக்குமே..
மழை வழி கடல் விடும் விண் காதல் மண்ணை சேருமே..
உன்னை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே நீ போய் வா வா வா..