ORU KAN JAADAI SEITHALE

 ஒரு கண் ஜாடை செய்தாலே


Movie: Anjaan

Singers: Benny dayal, Shwetha bandit

Music director: Yuvan shankar raja 


ஒரு கண் ஜாடை செய்தாலே..
மனம் பஞ்சாகும் தன்னாலே..
இடை விடாத அன்பாலே..
எனை வெண்மேகம் செய்தாளே..
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே..
உயிரில் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே..

ஒரு கண் ஜாடை செய்தாலே..
மனம் பஞ்சாகும் தன்னாலே..
இடை விடாத அன்பாலே..
எனை வெண்மேகம் செய்தாளே..

வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன்..
எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய் மறந்தேன்..
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே..
அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளி கொள்வேன் நிமிடத்திலே..
எந்நாளுமே வேண்டுமே..
உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம்..
காதல் ஒன்று தான்..
இறுதி வரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்..

Ok ஒரு கண் ஜாடை செய்தாலே..
மனம் பஞ்சாகும் தன்னாலே..
இடை விடாத அன்பாலே..
எனை வெண்மேகம் செய்தாளே..

தொடரும் போட்ட கதையை போலே இந்த மாலை முடிகிறதே..
உனது கண்கள் பார்க்க தானே எனது காலை விடிகிறதே..
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே..
உன்னை காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே..
மின்சார தோட்டமே..
உன் மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி..
காதல் செய்யலாம்..
முழு பூமி பார்த்து மூர்ச்சை ஆகும்படி..

Come on ஒரு கண் ஜாடை செய்தாலே..
மனம் பஞ்சாகும் தன்னாலே..
இடை விடாத அன்பாலே..
எனை வெண்மேகம் செய்தாளே..
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே..
உயிரில் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே..