MUNDASU SOORIYANE
முண்டாசு சூரியனே
Movie: Sandakozhi
Singers:Karthik, Palakkad sreeram
Music director: Yuvan shankar raha
முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே..
தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே..
நூறு தலமுறையா ஊராளும் குலமே..
வீர பரம்பரைக்கு வித்தான இனமே..
வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி..
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி..
முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே..
தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே..
மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதய்யா..
அட மறையாத சூரியனின் அம்சம் வருதய்யா..
வெட்டருவா வெரலிருக்கும் சிங்கம் வருதய்யா..
எங்க தன்மானம் காத்து நிக்கும் தங்கம் வருதய்யா..
எட்டு பட்டி சனத்துக்கும் சாமி போலடா..
ஐயா நெழலு கூட சாஞ்சதில்ல பூமி மேலடா..
நீ தல குனிஞ்சு யாரும் பார்த்ததில்ல..
உங்க தல நிமிந்து நாங்க பார்த்ததில்ல..
வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி..
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி..
அள்ளி அள்ளி கொடுத்ததுல செவந்த கையடா..
இது அருவாள தூக்கி நின்னா அய்யனாருடா..
கம்பங்கூழு குடிக்கும் ஒரு கடவுள் ஏதடா..
அத எங்க ஊரு எல்லைக்குள்ள வந்து பாருடா..
நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழ இல்லடா..
ஐயா வாழும் மண்ணுல யாரும் இங்க ஏழ இல்லடா..
இது பரம்பரையா அள்ளி தந்த வானம்..
ஏழு தலமுறையா வாழ்ந்து வரும் மானம்..
வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி..
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி..
முண்டாசு சூரியனே முக்குலத்தில் மூத்தவனே..
தேயாத சந்திரனே தேர் போல நின்னவனே..
நூறு தலமுறையா ஊராளும் குலமே..
வீர பரம்பரைக்கு வித்தான இனமே..
வீச்சருவா சாமி இது வேலு கம்பு பூமி..
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி..
....................
Songs lyrics from Sandakozhi movie:-
