KETTA KODUKKURA BOOMI IDHU
கேட்டா கொடுக்குற பூமி இது
Movie: Sandakozhi
Singers: Sujatha mohan, chinmayi, Ganga sitharasu, jassie gift
Music director: Yuvan shankar raja
ஆண்: கேட்டா கொடுக்குற பூமி இது..
கேக்காம கொடுக்குற சாமி இது..
கேட்டா கொடுக்குற பூமி இது..
கேக்காம கொடுக்குற சாமி இது..
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்..
பெரிய நெத்தி இருக்கும் கோபம் வம்மி இருக்கும்..
ஆ&பெ: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
ஆண்: சாமி சாமி சாமிடா வெள்ள குதிரை ஏறி வரும் நம்ம குலசாமிடா..
காமி காமி காமிடா நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமிடா..
கேட்டா கொடுக்குற பூமி இது..
கேக்காம கொடுக்குற சாமி இது..
ஆண்: உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்..
அத உன் கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்..
பெண்: நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்..
அத சாமி கிட்ட சொல்லலியே மறச்சு வச்சேன்..
எல்லோருக்கும் என்னன்னமோ கனவிருக்கு..
அட யாருக்கும் தான் யாருன்னு முடிச்சிருக்கு..
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு..
இவ வெளக்கேத்த எங்க வீடு தவம் கெடக்கு..
ஆண்: மணக்க மணக்க பூத்தார எடுத்து எடுத்து வருவோம்..
கணக்கு வழக்கு பார்க்காம தடுக்க சொல்லி தருவோம்..
ஆ&பெ: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
ஆண்: பத்து மைல் தூரத்துல நீ வருவ..
இந்த பக்தனோட மனசெல்லாம் தீப்பிடிக்கும்..
பெண்: மூச்சு தொடும் தூரத்துல நீ இருப்ப..
அந்த சூட்டுல தான் மனசுக்குள்ள குளிர் எடுக்கும்..
ஆச பட்ட நாயகன அடைஞ்சாளே..
அவ ஆறடிய சேலையிலே முடிஞ்சாளே..
அடங்காத காளைக்கு கயிறாக..
ஒரு மயில் தோக வாய்ச்சிருக்கு வகையாக..
ஆண்: சாவி கொத்து பறிபோகும் சமையல் கட்டு பறிபோகும்..
வாச கோலம் கைமாறும் வாரிசொன்னு உருவாகும்..
கேட்டா கொடுக்குற பூமி இது..
கேக்காம கொடுக்குற சாமி இது..
கேட்டா கொடுக்குற பூமி இது..
கேக்காம கொடுக்குற சாமி இது..
கையில கத்தி இருக்கும் மீச சுத்தி இருக்கும்..
பெரிய நெத்தி இருக்கும் கோபம் வம்மி இருக்கும்..
ஆ&பெ: ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்..
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்..
....................
Songs lyrics from Sandakozhi movie:-
