DHAVANI POTA DEEPAVALI

 தாவணி போட்ட தீபாவளி

Movie: Sandakozhi

Singers: Vijay yesudas, Shreya ghoshal

Music director: Yuvan shankar raha

ஆண்: தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு..
கண்ணா கண்ணாம்பூச்சு என் கன்னா பின்னா பேச்சு..
பட்டாம் பட்டாம்பூச்சு என் பக்கம் வந்து போச்சு..
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல..
இந்த அழகு சரிய மனசு எறிய கணக்கு புரியல..

பெண்: முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே..
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே..
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பொழச்சு போறான் ஆம்பள..

ஆண்: இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல..
இந்த அழகு சரிய மனசு எறிய கணக்கு புரியல..

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா..
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா..

பெண்: பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா..
பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா..

ஆண்: மகாமக கொளமே என் மனசுக்கேத்த மொகமே..
நவா பழ நெறமே என்ன நறுக்கி போட்ட நகமே..
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு ஏதும் தோணல..
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாளே..
என்ன அடுக்கு பான முறுக்க போல உடச்சு தின்னாளே..

பெண்: கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே..
எட்டி இரு எட்டி இரு இன்னும் வெகுதூரமே..

ஆண்:  பாவாடை கட்டி நிக்கும் பாவலரு பாட்டு நீ..
பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ..
தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்..
ஈச்ச மர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்..
அறுந்த வாலு குறும்பு தேளு ஆனாலும் நீ ஏஞ்சலு..

பெண்: ஈர கொல குலுங்க குலுங்க சிரிச்சு நின்னானே..
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே..

ஆண்: தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு..
கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு..
கண்ணா கண்ணாம்பூச்சு என் கன்னா பின்னா பேச்சு..
பட்டாம் பட்டாம்பூச்சு என் பக்கம் வந்து போச்சு..

பெண்: முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே..
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே..
விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பொழச்சு போறான் ஆம்பள..

ஆ&பெ: இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல..
இந்த அழகு சரிய மனசு எறிய கணக்கு புரியல..
இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல..
இந்த அழகு சரிய மனசு எறிய கணக்கு புரியல..