YELEY ILANJINGAME
ஏலே இளஞ்சிங்கமே
Movie: Cobra
Singers: Rakshitha suresh
Music director: A.r.rahman
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ..
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன்
கூரையா காத்து நிப்பேன் சோகம் அண்டாம..
அந்த ஆகாச வீதியில சூரிய யானையில ஊர்கோலம் போக போற
ஊரெல்லாம் ஆள போற இருளே இல்லாம..
புதுசா ஒரு பூமி உனக்குண்டு சாமி..
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்..
அன்புக்குள் பொத்தி வைக்க எனையே நீ மறக்க
தேவத கூட்டம் உன்ன தேடி வரும்..
ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன்
கூரையா காத்து நிப்பேன் சோகம் அண்டாம..
காலமும் மாறுமே காயமும் ஆறுமே..
திசையெல்லாம் விடியுமே..
எதுவுமே முடியும்..
போகும் வழி நிழல் போல
கண்ணுக்கு மேல் இமை போல வழி துணையா வருவேன் நானே..
ஏலே ஏலே எளஞ்சிங்கமே என் சாமி நெஞ்சமே உன் கூடவே நான் இருப்பேன்
கூரையா காத்து நிப்பேன் சோகம் அண்டாம..
அந்த ஆகாச வீதியில சூரிய யானையில ஊர்கோலம் போக போற
ஊரெல்லாம் ஆள போற இருளே இல்லாம..
.........................
Songs lyrics from Cobra tamil movie:
