AADHEERA AADHEERA
அதீரா அதீரா
Movie: Cobra
Singers: Vagu mazan,
Music director: A.r.rahman
பெண்: தீரா தீராதி தீரா துப்பாக்கி மந்திரா..
சமர் செய்யும் சந்திரா..
யுகம் வெல்ல வந்தீரா..
ஓரா ஓராயிரம் புதிரா..
அணு உலையின் உதிரா..
மின் காந்த கதிரா தீராதி தீரா..
இவன் தோட்டாக்கள் விளையாட்டில் ஜெயிப்பதே விதியாகும்..
இவன் தோட்டத்தில் துப்பாக்கி செடிகள் பூவாகும்..
ஆண்: ஆதீரா ஆதீரா உன் ரூபம் பல நூறா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
ஏ சூரா ஏ சூரா அடங்காத அதிகாரா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
He pull up on the scene calculating you'd never think evaluating keys to all the piece coz he be waiting years of all the ease..
So let me tell you why they always call him cobra killers instincts and he dont need know love he always slide in silence till its over not a man of violence
But he never need to look over his shoulder co co cobra..
பெண்: ஒரு ஒருவன் அல்ல இருவன்..
அந்த இருவனும் இங்கே ஒருவன்..
உன் இருவரில் நல்லவன் ஒருவன்..
அதை மீறிய வல்லவன் ஒருவன்..
உன் உள்ளே இருப்பவன் மனிதன்..
அவன் உள்ளே இன்னொரு கணிதன்..
உன் மனிதம் உன்னை சொல்லும்..
உன் கணிதம் உலகை வெல்லும்..
பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது..
மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது..
ஆண்: ஆதீரா ஆதீரா உன் ரூபம் பல நூறா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
ஏ சூரா ஏ சூரா அடங்காத அதிகாரா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
பெண்: ஓராயிரம் யானையின் கொட்டம்..
ஒரு புலியின் யுக்தி தட்டும்..
நூறாயிரம் சேனை வட்டம்..
ஒரு அறிவின் தீப்பொறி எட்டும்..
அட நேர்மை என்றால் மட்டும்..
பல கைகளும் இங்கே தட்டும்..
நேர் நிற்கும் மரங்களை மட்டும்..
அந்த கைகளே வந்து வெட்டும்..
இவன் கோட்டைக்குள் கிடையாது நியாய சட்டங்கள்..
பின் வாங்காது வீழாது இவனின் திட்டங்கள்..
ஆண்: ஆதீரா ஆதீரா உன் ரூபம் பல நூறா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
ஏ சூரா ஏ சூரா அடங்காத அதிகாரா..
ஒரு மூச்சில் ஆளை அள்ளும் எதையும் வெல்லும் கோப்ரா..
He pull up on the scene calculating you'd never think evaluating
keys to all the piece coz he be waiting years of all the ease co co cobra..
.........................
Songs lyrics from Cobra tamil movie:
