AAZHIYILE MUKKULIKUM AZHAGE
ஆழியிலே முக்குளிக்கும் அழகே
Movie: Dhaam dhoom
Singer: Haricharan
Music director: Harris jayaraj
ஆழியிலே முக்குளிக்கும் அழகே..
ஆதியிலே தத்தளிக்கும் அழகே..
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா..
மூச்சோடு குடியேறவா..
உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா..
என் ஜென்மம் ஈடேறவா..
ஆழியிலே முக்குளிக்கும் அழகே..
ஆதியிலே தத்தளிக்கும் அழகே..
உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா..
இச்சைக்கோர் விலை வைக்கவா..
உன் உம் என்ற சொல்லுக்கும் இம் என்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா..
மௌனத்தில் குடி வைக்கவா..
அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி..
மறைத்தாலும் மறக்காது அழகே..
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிறந்தாலும் உனை போல இருக்காது அழகே..
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிறந்தாலும் உனை போல இருக்காது அழகே..
அழகே அழகே வியக்கும் அழகே..
அழகே அழகே வியக்கும் அழகே..
.......................
Songs lyrics from dhaam dhoom movie:-
