UNAKKENA IRUPEN
உனக்கென இருப்பேன்
Movie: Kadhal
Singers: Haricharan
Music director: Joshua sridhar
உனக்கென இருப்பேன்..
உயிரையும் கொடுப்பேன்..
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்..
கண்மணியே கண்மணியே..
அழுவதேன் கண்மணியே..
வழித்துணை நான் இருக்க..
உனக்கென இருப்பேன்..
உயிரையும் கொடுப்பேன்..
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்..
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்..
கண்மணி காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா..
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்துபூச்சிகள் பார்த்திடுமா..
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்..
நம் காதல் தடைகளை தாண்டும்..
வளையாமல் நதிகள் இல்லை..
வலிக்காமல் வாழ்க்கை இல்லை..
வருங்காலம் காயம் ஆற்றும்..
நிலவொளியை மட்டும் நம்பி கிளை எல்லாம் வாழ்வதில்லை..
மின்மினியும் ஒளி கொடுக்கும்..
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்..
தோழியே இரண்டுமாய் என்றும் நான் இருப்பேன்..
தோளிலே நீயுமே சாயும்போது..
எதிர் வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்..
வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீக்குளிப்பேன்..
உதிரத்தில் உன்னை கலப்பேன்..
விழி மூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்..
கனவுக்குள் காவல் இருப்பேன்..
நான் என்றால் நானே இல்லை நீதானே நானாய் ஆனேன்..
நீ அழுதால் நான் துடிப்பேன்..
உனக்கென இருப்பேன்..
உயிரையும் கொடுப்பேன்..
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்..
கண்மணியே கண்மணியே..
அழுவதேன் கண்மணியே..
வழித்துணை நான் இருக்க..
வழித்துணை நான் இருக்க..
வழித்துணை நான் இருக்க..
வழித்துணை நான் இருக்க..
.......................
Songs lyrics from kaadhal movie:
