THANDATTI KARUPAYI

 தண்டட்டி கருப்பாயி



Movie: Kadhal

Singers: pop shalini,  vidhya,  malar, malaiyamma

Music director: Joshua sridhar


தண்டட்டி கருப்பாயி தாழை ஊரு மருதாயி
தண்டட்டி கருப்பாயி தாழை ஊரு மருதாயி
பேச்சியம்மா சடங்காயி குச்சுக்குள்ள வாராளே
தநனே தானே போடு தானே நானே நானே..
ஆர்மோனிய பொட்டி போல அவரு சத்தம் பண்ணுவாளே
ஆர்மோனிய பொட்டி போல அவரு சத்தம் பண்ணுவாளே
கீழத்தூரு மேளம் போல கீறிடுதோ உங்க ராகம்..
வந்தாலும் வாங்க மருத சுண்ணாம்பு வாங்க 
போனாலும் போங்க ஒங்கலோட போட்டோவ தாங்க..

தண்டட்டி கருப்பாயி தாழை ஊரு மருதாயி
பேச்சியம்மா சடங்காயி குச்சுக்குள்ள வாராளே..
கொலுசுகால் சத்தமிட கல் உடைய மண் உடைய 
குதியாட்டம் போட்ட புள்ள குமரி புள்ள ஆனாளே..
ஆயிரங்கால் மண்டபத்த அர நாளில் பாத்தவக..
உன் அழக பாக்கணுனா ஒரு மாசம் புடிக்குமடி..
உச்சனூரு மாமன் இங்க குச்சு கட்ட வந்துருக்கான்..
உசுலம்பட்டி மாமன் காரன் உச்சு கொட்ட வந்திருக்கானே..

கல்லு வச்ச கம்மலையும் கனமான சங்கிலியும்..
கல்லுப்பட்டி மாமன் காரன் காலடியில் வச்சுருக்கான்..
ஆசைக்கு போட்டு அழகென்ன காட்டு..
ஆத்தாடி அதுக்கு தான் காத்துருக்கான்..

மொய் எழுதி வந்த நக எட போட்டு மாளுதடி..
வெள்ளாட்டு குட்டி வெட்டி வீதி எல்லாம் ரொம்புதடி..
சோத்துக்குள்ள கறியா கறிக்குள்ள சோறா..
பந்தியில சாதி சனம் கொழம்புதடி..

மாமரத்து மேல் இருந்து மாமரத்து மேல் இருந்து
நேத்து சமஞ்ச புள்ள மால முடியயில்ல மால முடியயில்ல
மாலைக்கு ஆச பட்டு மயங்குனாரு மாமன் மகன் 
மாலைக்கு ஆச பட்டு மயங்குனாரு மாமன் மகன் 
சுப மங்கள நித்த சுப மங்களம்..
 
வாயாடி பேச்செல்லாம் ஏற கட்டிக்கோ..
வாலாட்டும் வேலையெல்லாம் மூட்ட கட்டிக்கோ..
பூவுன்னா வண்டு வரும் புரிஞ்சி நடந்துக்கோ..
பொண்ணுன்னா வெக்கம் வரும் தெரிஞ்சி நடந்துக்கோ..

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்..
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்..
நான் குழந்தை என்று நேற்று நினைத்திருந்தேன்..
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்..
அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்..
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்..
நான் குழந்தை என்று நேற்று நினைத்திருந்தேன்..
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்..

பம்பரக்கா சுத்தாம அடக்கி வெச்சுக்கோ..
பல்லாங்குழி ஆட என்ன துணைக்கு வெச்சுக்கோ..
ஒத்தையில படுக்காத மனசில் வெச்சுக்கோ..
நம்ம குலசாமி திந்நூறு தலைக்கு வெச்சுக்கோ..