THOTTU THOTTU ENNAI
தொட்டு தொட்டு என்னை
Movie: Kadhal
Singers: Haricharan, Harini sudhakar
Music director: Joshua sridhar
ஆண்: எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்..
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே..
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து இறப்பேன் பெண்ணே..பெண்ணே..பெண்ணே..
ஆண்: தொட்டு தொட்டு என்னை..
வெற்று களி மண்ணை..
சிற்பமாக யார் செய்ததோ..
சிற்பமாக யார் செய்ததோ..
பெண்: தொட்டு தொட்டு என்னை..
பட்டாம்பூச்சி பெண்ணை..
திட்டமிட்டு யார் வென்றதோ..
திட்டமிட்டு யார் வென்றதோ..
ஆண்: விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்..
பெண்: உனக்குள் ம்..தொலைந்து உயிரோடு கலக்கிறேன்..
ஆண்: தொட்டு தொட்டு என்னை..
வெற்று களி மண்ணை..
சிற்பமாக யார் செய்ததோ..
சிற்பமாக யார் செய்ததோ..
பெண்: தொட்டு தொட்டு என்னை..
பட்டாம்பூச்சி பெண்ணை..
திட்டமிட்டு யார் வென்றதோ..
திட்டமிட்டு யார் வென்றதோ..
ஆண்: தாயுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உடனே மறக்கும்..
உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம் உள்ளே நிலைக்கும்..
பெண்: முதல் முறை உன்னை பார்த்தது எங்கே மனதும் தேடும்..
மழை நின்ற பின்னும் மரக்கிளை இங்கே மெதுவாய் தூறும்..
ஆண்: இதயத்தின் உள்ளே இமயத்தை போலே சுமைகளை வைத்தால் காதல்..
பெண்: உலகத்தில் உள்ள சித்திரவதைக்கெல்லாம் செல்ல பெயர் வைத்தால் காதல்..
ஆண்: எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்..
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே..
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து..
உன் மடியில் தலை சாய்த்து இறப்பேன் பெண்ணே..
ஆண்: கருவிழி ரெண்டும் கருவறைதானோ மீண்டும் பிறந்தேன்..
கங்காருவை போல நெஞ்சுக்குள்ளே நானே உன்னை சுமந்தேன்..
பெண்: உன்னை போலே யாரும் என்னை தாண்டி போனால் உன்னை நினைப்பேன்..
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்க தான் உயிரை சுமப்பேன்..
ஆண்: நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்..
பெண்: தொடக்கமும் இல்லை முடிவுகள் இல்லை கடவுளை போலே காதல்..
பெண்: தொட்டு தொட்டு உன்னை..
வெற்று களி மண்ணை..
சிற்பமாக யார் செய்ததோ..
சிற்பமாக யார் செய்ததோ..
ஆண்: தொட்டு தொட்டு உன்னை..
பட்டாம்பூச்சி பெண்ணை..
திட்டமிட்டு யார் வென்றதோ..
திட்டமிட்டு யார் வென்றதோ..
பெண்: விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்..
ஆண்: உனக்குள் ஆ...தொலைந்து உயிரோடு கலக்கிறேன்..
பெண்: தொட்டு தொட்டு உன்னை..
வெற்று களி மண்ணை..
சிற்பமாக யார் செய்ததோ..
சிற்பமாக யார் செய்ததோ..
ஆண்: தொட்டு தொட்டு உன்னை..
பட்டாம்பூச்சி பெண்ணை..
திட்டமிட்டு யார் வென்றதோ..
திட்டமிட்டு யார் வென்றதோ..
.......................
Songs lyrics from kaadhal movie:
