THAAMTHAKKA THEEMTHAKKA

 தாம்தக்க தீம்தக்க



Movie: Thirumalai

Singers: Tippu, Karthik

Music director: Vidyasagar


 தீம் தக்க தய்ய  தக்க கூத்து..
நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து...
தாம் தக்க தீம் தக்க தய்ய  தக்க கூத்து..
நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து...
ஒன்னு ரெண்டு மூணு எண்ணுவதுக்குள்ளே..
ஓடி போகும் காலம் நிற்காதே..
சுற்றி வரும் பூமி சுற்றி விடும் முன்னே சூரியனை தொட்டுவிடலாம் அதாலே..

தாம் தக்க தீம் தக்க தய்ய  தக்க கூத்து..
நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து...

வானம் கிடுகிடுங்க பூமி நடுநடுங்க எழுந்து ஆடலாம் தோழா..
தேகம் துடிதுடிக்க ரத்தம் அனல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா..
சகா காலை விழித்து மாலை உறங்கும் வாழ்க்கையை மறப்போம் வா..
சகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா..
ஓ வானமா  எல்லை ஏ இல்லவே இல்லை..
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே..

தாம் தக்க தீம் தக்க தய்ய  தக்க கூத்து..
நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து..

கமாயோ..கமாயோ..

தோளில் வலு இருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா..
உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா..
சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா..
சகா கோர்க்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்ப்போம் வா..
ஓ வானமா  எல்லை ஏ இல்லவே இல்லை..
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே..

தாம் தக்க தீம் தக்க தய்ய  தக்க கூத்து..
நீயில்ல நானில்ல நாமுன்னு மாத்து...
ஒன்னு ரெண்டு மூணு எண்ணுவதுக்குள்ளே..
ஓடி போகும் காலம் நிற்காதே..
சுற்றி வரும் பூமி சுற்றி விடும் முன்னே சூரியனை தொட்டுவிடலாம் அதாலே..

கூத்தே.. கூத்தே.. கூத்தே..கூத்தே..கூத்தே..