AZHAGOORIL POOTHAVALE
அழகூரில் பூத்தவளே
Movie: Thirumalai
Singers: S.P.Balasubramaniam, Sujatha mohan
Music director: Vidyasagar
ஆண்: அழகூரில் பூத்தவளே..
என்னை அடியோடு சாய்த்தவளே..
மழையூரின் சாரலிலே...
என்னை மார்போடு சேர்த்தவளே..
உனை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்..
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்..
அழகூரில் பூத்தவளே..
என்னை அடியோடு சாய்த்தவளே..
பெண்: நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா..
ஆண்: நீ சுருட்டி போட்ட முடி மோதிரமா ஆகுமடி..
பெண்: இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழிக்க..
கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே..
ஆண்: சடையாலே நீ இழுக்க இடை மேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே..
பெண்: என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்..
ஆண்: ஓய் ஓய் ஓய் அழகூரில் பூத்தவளே..
என்னை அடியோடு சாய்த்தவளே..
ஆண்: நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்..
பெண்: நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்..
ஆண்: குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க..
சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி..
பெண்: அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க..
காதல் மழை ஆயுள் வரை தூறுமடா..
ஆண்: என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்..
பெண்: ஓய் ஓய் ஓய் அன்பூரில் பூத்தவனே..
ஆண்: ம்..ம்..என்னை அடியோடு சாய்த்தவளே..
பெண்: ம்..ம்..மழையூரின் சாரலிலே...
ஆண்: ம்..ம்.. என்னை மார்போடு சேர்த்தவளே..
பெண்: உனை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்..
ஆண்: உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்..
....................
Songs lyrics from Thirumalai movie:
