ROJA POONTHOTTAM

 ரோஜா பூந்தோட்டம்

Movie: Kannukul nilavu

Singers: P.Unni krishnan, Anuradha sriram

Music director: Ilayaraja

ஆண்:  ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்..
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்..
பூவின் இதழெல்லாம் மௌனராகம் மௌனராகம்..
ஒவ்வொரு இலையிலும் தேன் துளி ஆடுதே..
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே..
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ..

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்..
பூவின் இதழெல்லாம் மௌனராகம் மௌனராகம்..

ஆண்: விழியசைவில் உன் இதழசைவில்..
இதயத்திலே இன்று  ஒரு இசை தட்டு சுழலுதடி..

பெண்: ஓ..ஓ..ஓ..

ஆண்: புதிய இசை ஒரு புதிய திசை..
புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி..

பெண்: ஓ..ஓ..ஓ..
காதலை நான் தந்தேன்..
வெட்கத்தை நீ தந்தாய்..
காதலை நான் தந்தேன்..
வெட்கத்தை நீ தந்தாய்..
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை  சுடுகிறதே..

பெண்: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்..
பூவின் இதழெல்லாம் மௌனராகம் மௌனராகம்..

ஆண்: ஒவ்வொரு இலையிலும் தேன் துளி ஆடுதே..
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே..
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே ..

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்..
பூவின் இதழெல்லாம் மௌனராகம் மௌனராகம்..

பெண்: உனை நினைத்து நான் விழித்திருந்தேன்..
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்..

ஆண்: ஓ..ஓ..ஓ..ஓ..

பெண்: நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்..
பருவ நிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருந்தேன்..ஓ..ஓ..ஓ..

ஆண்: சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்..
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்..
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்..