ORU NAAL ORU KANAVU

 ஒரு நாள் ஒரு கனவு

Movie: Kannukul nilavu

Singers: K.J.Yesudas, Anuradha sriram

Music director: Ilayaraja

பெண்: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..

ஆண்: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..

பெண்: நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..

ஆண்: வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூப்பறித்தோம்..

பெண்: வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம்..
நீச்சலடித்திட..

ஆ&பெ: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..

பெண்: நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிளி கூட்டம்..ம்ம்..

ஆண்: கிளி கூட்டம் கிளி கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்..ம்ம்..

பெண்: பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க..

ஆண்: கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க..

பெண்: ரெக்கைகள் கொண்டு வா..
விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணக்கிளி..

பெண்: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..

ஆண்: எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ..ஓ..

பெண்: உன் மனதை உன் மனதை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ..ஓ..

ஆண்: ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன் முத்த அடையாளங்களோ..

பெண்: இரவில் விழித்திருந்து நீதான் கற்றதென்ன பாடங்களோ ..

ஆண்: மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே..
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கொடி..

பெண்: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..

ஆண்: நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..

பெண்: வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திர பூப்பறித்தோம்..

ஆண்: வெள்ளி பிறை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம்..
நீச்சலடித்திட..

ஆ&பெ: ஒருநாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது..
நிஜமாய் இனிக்கிறது இதுபோல் கனவொன்று கிடையாது..