NILAVU PAATU

 நிலவு பாட்டு

Movie: Kannukul nilavu

Singers: Hariharan

Music director: Ilayaraja

நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு ஓர் நாள் கேட்டேன்..
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்..

நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு ஓர் நாள் கேட்டு..

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்கு புரிந்தது..
இரு உயிருக்கு புரிந்தது இங்கு யாருக்கு தெரிந்தது..
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே..
இசையின் மகளை பார்த்ததில்லையோ..

கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா..
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா.‌.
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்..
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்..
குயில்களும்  மலர்களும் அதிசயம்..
கனவுகள் கவிதைகள் ரகசியம்..

நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு ஓர் நாள் கேட்டு..
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்..

நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே..
மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே..
கொலுசுகள் கீர்த்தனை யார் அந்த தேவதை..
விழிகளில் விரிகிறாள் யார் அந்த தாமரை..
இது ஒரு புதுவித பரவசம்..
மயக்குது இசை என்னும் அதிசயம்..