RAAKACHI RANGAMMA

 ராக்காச்சி ரங்கம்மா



Movie: Sivappu manjal pachai

Singers: Anitha karthikeyan

Music director: Siddhu kumar


ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா..
டார்லிங்க டார்ச்சரா பாத்தாலம்மா..
ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா..
காத்தாடி நூலா அந்து போனாலம்மா..
தார் சாலை சிங்கம் தான் சேலஞ்ச் பண்ணிதான்
வந்தானே தொல்ல தந்தானே..
ஏ கோளாறு இல்லாத பூலோகம் காணாத மாப்பிள்ள கேக்குறானே..
பாவமே பாக்காம வெச்சி தான் செய்யுறான்..
வெதம் வெதமா ஃபோட்டோ பார்த்தும் வேணான்னு சொல்லுறான்..
ரன்வீரும் ரன்பீரும் மிக்ஸ் ஆக்கி கேக்குறான்..
இவனோட அக்கா என்ன தீபிகா படுகோனா..

ஏதேதோ தொல்ல தந்து போனாலும் இவன் மேல கோவம் வல்ல..
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா அட கமுக்கமா சிரிப்பா உள்ள..
புரியாத ஒன்னு அவளையும் இவனையும் பூட்டுது..
அறியாம நெஞ்சு  அடிதடி அடிதடி பண்ணுது..
இவனோட உள்ளம் வெள்ள விழுந்துட்டா படிச்ச புள்ள..
அடடா எலியும் புலியும் மனச தான் மாத்திக்கிச்சே..

ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா..
டார்ச்சர டார்லிங்கா  பாத்தாலம்மா..
ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா..
சில்வண்ட போல சுத்தி வந்தாலம்மா..
டா போட்டா டேலண்ட்டா டீ போட்டா டீசன்ட்டா..
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா..
அவ தீ வெச்சா சைலண்ட்டா பத்தி தான் வையேன்டா..
நாள் எல்லாம் போச்சே நோ என்டா..
பொல்லாத புள்ளான்டான் நிக்காம வெள்ளான்டான்..
ரக ரகமா ரகள செஞ்சு இவ மனசு களவாண்டான்..
கில்லாடி சுள்ளான்டான் நெஞ்செல்லாம் உட்காந்தான்..
ஒரு உறவ தேடி வந்து புது உறவ கொண்டாந்தான்..