AATHI YAARADI - MAYILANJIYE

ஆத்தி யாரடி -  மயிலாஞ்சியே



Movie: Sivappu manjal pachai

Singers: Anand aravindakshan, Shasha tirupati

Music director: Siddhu kumar


ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி..
கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போறடி..
சாஞ்சி பாரடி சாஞ்சே போனேன்டி..
கன்னத்தோட கன்னம் வச்சி கிச்சு கிச்சு மூட்டி போறடி..
நீ சொன்ன வார்த்த நான் சேர்த்து வெச்சேன்..
என் மூச்சு காத்தா நான் மாத்தி வெச்சேன்..
என் சிறு மயிலாஞ்சியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள ..
என் சிறு கள்ளாலியே தவிக்குது உள்ளுக்குள்ளே..
எனக்கென நீயிருந்தா ஒருத்தரும் தேவையில்ல..
மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல..

ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி..
கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போறடி..

உள்ளங்கைக்குள்ளே முகம் வச்சு ஒட்டி கொள்ள காலம் பூரா நீ வேணும்..
உன்ன பாக்காத ஒத்த நொடி நெஞ்சுக்குள்ள 
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்..

பெண்: ஹா ஹா  நீயில்லா நாள தான் நெனச்சி நான் பாக்கல கைகள் கோக்கணும் தெனம் 
மூச்சத மொதல் மொற  விரலுல பாக்குறேன் கூசுதா நடுங்குதா..

ஆண்: மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து இதமா நெஞ்சோடு வைப்பேனே..
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்..
உசுரே என் தாரம் வா நீதானே..

என் சிறு மயிலாஞ்சியே மயங்கிடு நெஞ்சுக்குள்ள..
என் சிறு கள்ளாலியே தவிக்குது உள்ளுக்குள்ளே..

பெண்: எனக்கென நீயிருந்தா ஒருத்தரும் தேவையில்ல..
மடியில தூங்க செஞ்சா சாகவும் பயமே இல்ல..

ஆண்: ஆத்தி யாரடி ஏக்கம் தாரடி..
கொத்து கொத்தா ஆசை வெச்சி மொத்தமாக தூக்கி போறடி..ஓ..ஓ..ஓ..ஓ.