OO SOLRIYA OO OO SOLRIYA
ஊ சொல்றியா ஊஊ சொல்றியா
Movie: Pushpa the rise
Singers: Andrea jeremiah
Music director: Devi sri prasad
சேல சேல கட்டுனா குறுகுறு குறுனு பாப்பாங்க..
குட்ட குட்ட கவுன போட்டா குறுக்க மறுக்க பாப்பாங்க..
சேல ப்ளவுசோ சின்ன கவுனோ ட்ரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க..
ஆச வந்தா சுத்தி சுத்தி அலையோ அலையும் ஆம்பள புத்தி..
ஊ சொல்றியா மாமா ஊஹும் சொல்றியா மாமா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
கலரா இருக்கும் பொண்ண பாத்தா கணக்கு பண்ண துடிப்பாங்க..
கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா கலையா இருக்குனு சொல்வாங்க..
கலரோ கருப்போ மாநிறமோ நெறத்துல ஒன்னும் இல்லைங்க..
சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
நெட்டையாக வளந்த பொண்ண நிமிந்து நிமிந்து பாப்பாங்க..
குட்டையாக இருக்கும் பொண்ண குனிஞ்சு வளஞ்சு பாப்பாங்க..
நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒண்ணுங்க..
தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
கொழுக்கா மொழுக்கா வளந்த பொண்ண கும்முன்னு இருக்கு சொல்வாங்க..
குச்சி உடம்புகாரி வந்தா கச்சிதமுன்னு வழிவாங்க..
கொழுகொழு உடம்போ குச்சி உடம்போ சைஸ்சுல ஒன்னும் இல்லைங்க..
அல்வா மாதிரி அழக சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
பெரிய பெரிய மனிஷன்னின்னு ஒரு சிலர் இங்கே வருவாங்க..
ஒழுக்கமுன்னா நானேதான்னு ஒளறி சிலரு திரிவாங்க..
ஒழுக்க சீலன் ஒசந்த மனுஷன் வெளிய போடும் வேஷம்ங்க..
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்..
ம்..ம்..ம்..ம்..வெளக்க அணைச்சா போதும் எல்லாம் வெளக்குமாறும் ஒன்னுதாங்க..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா..
ஊ சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா..
......................
Songs lyrics from Pushpa: the rise tamil movie:
