ODU ODU AADU

 ஓடு ஓடு ஆடு




Movie: Pushpa the rise

Singers: Benny dayal

Music director: Devi sri prasad


தந்தானே தனேநனே நானே..
தந்தானே தானே நானே நானே.. 
தநானே தன்னி நனி நானே..
ததானே தன்னி நனி நானே..

வெளிச்சத்த தின்னுது காடு..
வெளிச்சத்த தின்னுது காடு..
காட்ட தின்னுது ஆடு..
காட்ட தின்னுது ஆடு..
ஆட்ட தின்னுது புலி..
ஆட்ட தின்னுது புலி..
இதுதான்டா பசி..
இதுதான்டா பசி..

புலிய தின்னுது சாவு..
சாவ தின்னுது காலம்..
காலத்த தின்னுது காளி..
இதுதான் மகா பசி..

நிக்காம தொரத்தும் ஒன்னு..
அட சிக்காம பறக்கும் ஒன்னு..
மாட்டிட்டா இது செத்துச்சு..
மாட்டாட்டி பசியில அது செத்துச்சு..
ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா.. 
ஒரு ஜீவன் நிச்சயம் பலி தான்டா..
ஏய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடு..உய்..

மீனுக்கு புழுதான் வல..
பறவைக்கு தானிய வல..
நாய்க்கு எலும்பே வல..
மனுஷனுக்கு ஆசையே வல..
பன்னாரி அம்மன் கோயிலு  பலியா ஆடு கோழி கேக்குது..
கத்தியும் ரத்தம் பூசுது..
சாமிக்கு தட்சணை கொடு வரம் தர இதுதான் விதியின் யாத்திர..
எளைச்சவன் பாடு திண்டாட்டம்..
இதுதான் உலகின் வேதம்..
வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது காலம் சொல்லும் பாடம்..
பசியின் முன்னே தெரியாது நீதி நியாயம்.. 
பலம் இருக்கும் ஆளோட கையில் ராஜ்ஜியம்..
ஏய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடு..உய்..

அடங்கி கெடந்தா தவறு..தவறு..
அடிச்சவன்தானே பவரு..பவரு..
ஒதைக்கிற வழிதான் பெருசு..பெருசு..
ஒதைக்கு முன்னாடி உலகம் சிறுசு..

தாக்குற ஆளு மேல தயங்குற ஆளு கீழ..
குத்துல கிடைக்கிற பாடம் புத்தனும் கூட சொல்லலடா..