USURE POGUTHEY

 உசுரே போகுதே

Movie: Raavanan

Singers: Karthik,  Mohammed irfan ali 

Music director: A.R.Rahman 

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த..
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச..
அடி தேக்குமர காடு பெருசுதான்..
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்..
அடி தேக்குமர காடு பெருசுதான்..
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்..
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி..
கருந்தேக்கு மர காடு வெடிக்குதடி..
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே..
ஓ..மாமன் தவிக்குறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே..
அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி..
அக்கினி பழமின்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி..
உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நெனைக்கேன் ஆகல..
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல..
தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி..
தயிலாங்குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி..
இந்த மம்முத கிறுக்கு தீருமா..
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா..
என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிரும்மா..
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே..
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே..

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே..
ஓ..மாமன் தவிக்குறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே..
அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி..
அக்கினி பழமின்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி..

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல..
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல..
விதி சொல்லி வழி போட்டான் மனுசபுள்ள..
விதிவிலக்கில்லாத விதியும் இல்ல..
எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமர..
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல..
பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே..
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நெனைக்கலயே..
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்..
என் கண்ணுல உன் முகம் போகுமா..
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள..
சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே..
சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே..

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே..
ஓ..மாமன் தவிக்குறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணிக்குயிலே..
அக்கர சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி..