KODU POTTA

 கோடு போட்டா 




Movie: Raavanan

Singers: Benny dayal 

Music director: A.R.Rahman 


கோடு போட்டா கொன்னு போடு..
வேலி போட்டா ஏ வெட்டி போடு..
நேத்து வரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்..
கோடு போட்டா ஏ  கொன்னு போடு..
வேலி போட்டா ஏ வெட்டி போடு..
வில்ல போல வளஞ்ச கூட்டம் வேல போல நிமிர்ந்து விட்டோம்..
சோத்துல பங்கு கேட்டா அட எலய போடு எலய..
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய..
ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது..
மேகம் வந்து சட்டம் போட்டா ஆகாயம் தான் கேட்காது..
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போட கூடாது..

பாம்ப கூட பழகி பசும்பால ஊத்தும் சாதி..
தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி..
கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்ல பெத்தா வீரனடா 
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா 
செத்த கெழவன் எழுதி வெச்ச ஒத்த சொத்து வீரமடா..

கோடு போட்டா கொன்னு போடு..
வேலி போட்டா  வெட்டி போடு..

எங்க காத்து மீன் சுட்ட வாசம் அடிக்கும்..
எங்க தண்ணி எரி சாராயம் போல் உறைக்கும்..
வத்தி போன உசுரோட வாழ்வானே சம்சாரி..
ஒரு சப்பாத்திக்கள்ளி வாழ வேணாமே மும்மாரி..
எட்டு காணி போனா அட எவனும் ஏழை இல்ல..
மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை..
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்..
சீயான் காட்ட தோண்டி பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான்..

கோ கோ கோ கோடு போட்டா ஏ ஏ கொன்னு போடு..
ஏ ஏ ஏ வேலி போட்டா ஏ ஏ ஏ வெட்டி போடு..
ஏஏ நேத்து வரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்..

கோடு போட்டா ஏ ஏ  ஏ கொன்னு போடு..
ஏ ஏ ஏ வேலி போட்டா ஏ ஏ வெட்டி போடு..
நேத்து வரைக்கும் உங்க சட்டம்
நேத்து வரைக்கும் உங்க சட்டம்
நேத்து வரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்..






......................





Songs lyrics from Raavanan movie: