THIRUPAACHI ARUVAALA

 திருப்பாச்சி அருவாள

Movie: Taj mahal

Singers: Kalpana ragavendar,  Clinton cerejo,  Palakkad sreeram,  chandran 

Music director: A.R.Rahman 

ஆண்: திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..
திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..
திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..

திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..
சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வெப்போம் வாடா வாடா..
எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா..
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா..
போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா..
 பூவெல்லாம் நம்ம ஊரில் புலி நகமா மாறும் வாடா..
வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள 
வெள்ளாவியில் போட்டு வெளுத்து கட்டு வாடா வாடா..

திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..
சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வெப்போம் வாடா வாடா..

பெண்: எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்க சியான் மூக்கறுத்தாக..

ஆண்: எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக..

பெண்: எங்க குறும்பாட்டு கறி கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக..

ஆண்: நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச கொரட்டாத்து தண்ணியில ஏன்டி அம்மா கறி சமைச்சீங்க..

பெண்: அட கோம்பா மாந்தோப்புல கொலகொலையா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக..

ஆண்: அந்த கோவணத்த கொண்டு போய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக..

பெண்: அட களவாணி கோத்திரமே காளமாட்டு..
அட களவாணி கோத்திரமே காளமாட்டு த்திரமே 
எப்ப நீங்க திருந்த போறீங்க..

ஆண்: திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..
சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வெப்போம் வாடா வாடா..
எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா..
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா..

ஆண்: உப்பு தின்னா தண்ணி குடி..
தப்பு செஞ்சா தலையிலடி..
பரம்பரையா எங்க கொள்கையடா..
மானம் தானே வேட்டி சட்ட..
மத்ததெல்லாம் வாழ மட்ட..
மானம் காக்க வீரம் வேணுமடா..
அட சோள கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறி விடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா..
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரம் தானே எங்க அம்சமடா..
நாங்க வம்பு சண்டைக்கு போறதில்ல..
வந்த சண்டைய விடுவதில்ல..
வரிப்புலி தான் தோத்ததில்லையடா..
எங்க உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா..
நான் தட்டி வெச்சா புலி அடங்கும்..
எட்டு வெச்சா மல உருகும்..
தொட்டதெல்லாம் தொலங்கபோகுதடா..

திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா..
சிங்கம் பெத்த பிள்ளையினு தெரிய வெப்போம் வாடா வாடா..
எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா..
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா..
போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா..
 பூவெல்லாம் நம்ம ஊரில் புலி நகமா மாறும் வாடா..
வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள 
வெள்ளாவியில் போட்டு வெளுத்து கட்டு வாடா வாடா..

திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..
திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..
திருப்பாச்சி அருவாள.. தீட்டிக்கிட்டு வாடா வாடா..

.........................

Songs lyrics from Tajmahal movie: