KULIRUDHU KULIRUDHU
குளிருது குளிருது
Movie: Taj mahal
Singers: Unni krishnan, Swarnalatha
Music director: A.R.Rahman

ஆண்: குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி..
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி..
கடலலை தீப்பிடித்தால் மீன்களின் கனவுகள் தொலைவதில்லை..
ஊர்களில் தீப்பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை..
ஆ&பெ: குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி..
பெண்: நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி..
பெண்: இதயத்தில் வலி ஒன்று வருது..
உன் இமைகளின் முடி கொண்டு தடவு..
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு..
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு..
ஆண்: இது தண்ணீர் ஊற்றியா தீரும்..
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்..
பெண்: தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடம் மாறும்..
ஆண்: பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்..
பெண்: மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்..
ஆ&பெ: நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்..
ஆண்: குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி..
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி..
ஆண்: நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்..
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்..
பெண்: முகத்துக்கும் முத்தத்துக்கும் சண்டையா..
அட முத்தமிட வேறு இடம் இல்லையா..
ஆண்: மழைத்துளி மழைத்துளி தொல்லையா..
அட அடை மழை தாக்க எண்ணம் இல்லையா..
பெண்: சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது தீது..
ஆண்: அடி பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்..
பெண்: தேகத்தை அணைத்து விடு..
சுடும் தீ கூட அணைந்து விடும்..
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்..
ஆண்: சுற்றி நின்றாடும் தீ வண்ணம் அணைவது திண்ணம்..
ஆ&பெ: குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி..
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி..
கடலலை தீப்பிடித்தால் மீன்களின் கனவுகள் தொலைவதில்லை..
ஊர்களில் தீப்பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை..
........................
Songs lyrics from Tajmahal movie: