VEYILODU VILAYAADI

 வெயிலோடு விளையாடி




Movie: Veyil

Singers: Tippu, V.V.prasanna, kailash kher,  jassie gift

Music director: G.V.Prakash kumar 


வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..
நண்டூறும் நரி ஊறும் கருவேலங்காட்டோரம்..
தட்டானாய் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே..
பசி வந்தா குருவி முட்ட தண்ணிக்கு தேவன் குட்ட..
பறிப்போமே சோள தட்ட புழுதி தான் நம்ம சட்ட..
புழுதி தான்  நம்ம சட்ட..

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..

வேப்பங்கொட்ட அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்..
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்..
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிபுல்லு அடிச்சோம்..
தண்டவாளம் மேல காச வச்சு தொலச்சோம்..
அஞ்சு பைசா ஃபிலிம வாங்கி அப்பாவோட வேட்டியில 
கண்ணாடி லென்ச வச்சு சினிமா காமிச்சோம்..
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச 
பரோட்டாக்கு பாதி சொத்த நாம அழிச்சோம்..
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்..
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்..

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..

வெண்ணிலவ வேட்டை ஆடி வீட்டில் அடச்சோம்..
பொன் வண்ட கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்..
காந்தத்த மண்ணுல தேய்ச்சு பேயா ஆட்டுனோம்..
ரெக்காடு டேன்சு பாக்க மீச ஒட்டுனோம்..
ஊமத்தம் பூவ மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்..
கழுதை மேல ஊர்வலமா ஊர சுத்துவோம்..
எங்க ஊரு மேகம் எல்லாம் எப்பவாச்சும் மழ பெய்யும்..
அப்போ நாங்க மின்னலுல ஃபோட்டோ புடிச்சோம்..
தொப்புள் கொடிய போலத்தான் இந்த ஊர உணர்ந்தோம்..
வெயில தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்..

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..
நண்டூறும் நரி ஊறும் கருவேலங்காட்டோரம்..
தட்டானாய் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே..
பசி வந்தா குருவி முட்ட தண்ணிக்கு தேவன் குட்ட..
பறிப்போமே சோள தட்ட புழுதி தான் நம்ம சட்ட..
புழுதி தான்  நம்ம சட்ட..

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி..
வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே..