KADHAL NERUPPIN

 காதல் நெருப்பின்




Movie: Veyil

Singers: Karthik,  Chinmayi 

Music director: G.V.Prakash kumar 


ஆண்: காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்..

பெண்: காதல் நீரின் சலனம்..
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்..

ஆண்: காதல் மாய உலகம்..
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்..

பெண்: புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்..

ஆண்: காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்..

பெண்: காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்..

ஆண்: கனவுகள் பூக்கின்ற செடியென கண்கள் மாறுதுன்னாலே..

பெண்: வயதிலும் மனதிலும் விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே..

ஆண்: உனது வளையாடும் அழகான கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே..

பெண்: குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே 
உனது கை ரெண்டும் குடை ஆனதே..

ஆண்: உனது முத்தத்தில் நிறம் மாறுதே.. 
உடலில் ஒரு கோடி நதி பாயுதே..

ஆண்: காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்..
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்..

ஆண்: வானத்தின் மறுபுறம் பறவையாய் நீயும் நானும் போவோமே..

பெண்: பூமியின் அடிபுறம் வேர்களாய் நீண்ட தூரம் போவோமே..

ஆண்: கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே காதல் மொழி கேட்டு மழை ஆனதே..

பெண்: நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே பூமி எங்கெங்கும் தான் வீசுதே..

ஆண்: என்னுள் உன்னை உன்னுள் என்னை காலம் செய்யும் காதல் பொம்மை..

ஆண்: காதல் நெருப்பின் நடனம்..
உயிரை உருக்கி தொலையும் பயணம்..
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்..