VAAMA DURAIYAMMA
வாமா துரையம்மா
Movie: Madrasapattinam
Singers: Udit narayan, cochin hanifa, Amy jackson
Music director: G.V.Prakash kumar
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..
வணக்கம் சொல்லி தான் வரவேற்கும் ஊரம்மா..
கட்டவண்டியில் போவோம்..
டிராமில் ஏறியும் போவோம்..
கூவம் படகிலும் போவோம்..போலாமா..
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யெம்மா..
தெரு யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யெம்மா..
கோடி அதிசயம் இங்கே யம்மம்மா..
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..
வணக்கம் சொல்லி தான் வரவேற்கும் ஊரம்மா..
ஓ பாவை கூத்துக்கள் பொம்மலாட்டங்கள் கோயில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்..
பின்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்..
கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்..
அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்..
வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் யம்மா..
வழிபோக்கன் வந்து தான் தங்கி செல்லுவான் சும்மா..
தாயும் தெய்வம் தான் இங்கே யம்மம்மா..
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..
வணக்கம் சொல்லி தான் வரவேற்கும் ஊரம்மா..
ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்..
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன வாழ்க்கையே எங்கள் நெறியாகும்..
இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்..
இங்கு மட்டுமே அன்பை காணலாம்..
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது யம்மா..
இதை அடிமையாக்கி தான் கொடுமை செய்வது நியாயமா..
வலையில் மலையும் தான் விழுந்தது யம்மம்மா..
வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..
வணக்கம் சொல்லி தான் வரவேற்கும் ஊரம்மா..
கட்டவண்டியில் போவோம்..
டிராமில் ஏறியும் போவோம்..
கூவம் படகிலும் போவோம்..போலாமா..
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யெம்மா..
தெரு யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யெம்மா..
கோடி அதிசயம் இங்கே யம்மம்மா..
..........................
Songs lyrics from madharasapattinam movie:
