POOKAL POOKUM THARUNAM
பூக்கள் பூக்கும் தருணம்
Movie: Madrasapattinam
Singers: Harini, Andrea Jeremiah, Roop kumar rathod,G.V.Prakash kumar
Music director: G.V.Prakash kumar
ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே..
பெண்: புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே..
ஆண்: நேற்று வரை நேரம் போகவில்லையே..
உனதருகே நேரம் போதவில்லையே..
பெண்: எதுவும் பேசவில்லையே..
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே..இது எதுவோ..
ஆண்: இரவும் விடியவில்லையே..
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே..பூந்தளிரே..ஓ..ஓ..
ஆண்: வார்த்தை தேவை இல்லை வாழும் காலம் வரை..
பாவை பார்வை மொழி பேசுமே..
பெண்: நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை..
இன்று இந்த நொடி போதுமே..
ஆண்: வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி..
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே..
பெண்: வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி..
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே..
ஆண்: இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்..
எங்கு கொண்டு நிறுத்தும்..
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்..
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..
ஆண்: பூந்தளிரே..
பெண்: Oh where..would I be..
Without this joy inside of me..
It makes me want to come alive..
It makes me want to fly..into the sky..
Oh where would I be
If I don't have you next to me
Oh where would I be..
Oh where..Oh where..
ஆண்: எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து..
எங்கும் ஈர மழை தூவுதே..
பெண்: என்ன உறவு இது எதுவும் புரியவில்லை..
என்ற போதும் இது நீளுதே..
ஆண்: யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்..
இவனோடு ஒர் சொந்தம் உருவானதே..
பெண்: ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்..
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே..
ஆண்: பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்..
பயணம் முடிவதில்லையே..
பெண்: காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்..
ஆ&பெ: இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே..
இது எதுவோ..
பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லையே..
புலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே..
ஆண்: நேற்று வரை நேரம் போகவில்லையே..
உனதருகே நேரம் போதவில்லையே..
பெண்: எதுவும் பேசவில்லையே..
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே..
ஆ&பெ: என்ன புதுமை..
இரவும் விடியவில்லையே..
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே....
ஆண்: இது எதுவோ..
..........................
Songs lyrics from madharasapattinam movie:
