AARUYIRE

 ஆருயிரே




Movie: Madrasapattinam

Singers: Sonu nigam,  Saindhavi 

Music director: G.V.Prakash kumar 


ஆண்: ஆருயிரே ஆருயிரே 
அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்..
நீயில்லையேல் நான் இல்லையே..
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்..

பெண்:  உயிரே என் உயிரே எனக்குள் உன் உயிரே..
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன்..

ஆண்: ஆருயிரே ஆருயிரே 
அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்..
நீயில்லையேல் நான் இல்லையே..
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்..

பெண்: விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்..
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்..

ஆண்: காற்றென மாறேனோ..ஓ..
உன் சுவாசத்தில் சேர்வேனோ..
நீ சுவாசிக்கும் போது வெளிவர மாட்டேன் உனக்குள் வசிப்பேனே..

பெண்: உயிரே என் உயிரே உனக்குள் என் உயிரே 
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என்னை பிரிகிறேன்..

ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்..

பெண்: கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்..

ஆண்: கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்..
மேற்றினில் வாழ்வேனோ..
உன் தோள்களில் சாய்வேனோ..
உன் கைவிரல் பிடித்து  காதலில் திளைத்து காலங்கள் மறப்பேனோ..ஓ..

பெண்: உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே..

ஆண்: நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரை துறக்கிறேன்..