MEGAME O MEGAME

 மேகமே ஓ மேகமே




Movie: Madrasapattinam

Singers: M.S.Viswanathan, Vikram, nassar 

Music director: G.V.Prakash kumar 


மேகமே ஓ மேகமே.. 
உன் மழையை கொஞ்சம் தூவாதே..
மாலையில் அந்தி மாலையில்.. 
உன்ன மறுபடி அழைப்போம் போகாதே..

மேகமே ஓ மேகமே.. 
உன் மழையை கொஞ்சம் தூவாதே..
மாலையில் அந்தி மாலையில்.. 
உன்ன மறுபடி அழைப்போம் போகாதே..
பக்கிங்காம் கால்வாயில் தண்ணீர்தான் நாம் கோயில்
அந்நாளும் வெளுத்து கட்டி வாழ்வோம்..
அட ஓயா தள்ளி போயா 
வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா..

மேகமே  ஓ மேகமே உன் மழையை கொஞ்சம் தூவாதே..
மாலையில் அந்தி மாலையில்  உன்ன மறுபடி அழைப்போம் போகாதே..

சூரியன் உதிக்கும்போது சாயம் போட போவோம்
சட்டுன்னு மழைத்துளி வந்தா நாங்க தாயம் ஆட தான் போவோம்..
வாடா வாடா வாடா ஒரு தாயம்..ஆறு..
வாடா வாடா வாடா ஒரே ஒரு தாயம்..ஈராறு..
வாடா வாடா வாடா ஒரே ஒரு  புள்ளி..ச்சே.
நாங்க நொண்டி கழுதை மேல நூறு மூட்டை போல..
வாழ்க்கை வருத்தும் போது நாங்க வானம் தேடி தான் போவோம்..
சலவைக்காரன் வாழ்க்கை கூட  சாமிய போல தான் 
உங்களோட பாவ மூட்டை சுமப்போம்..
அழுக்கோட வாழ்ந்தாலும் 
நெஞ்சில் தான் அழுக்கில்லை 
ஆகாயம் போல மனசு வெள்ளை..

அட ஓயா தள்ளி போயா 
வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா..
ஆ வாயா..

கையில காசு இல்ல மனசுல வேஷம் இல்ல 
பொய்யில வாழ்க்க இல்ல 
அதனால் கஷ்ட நஷ்டம் தான் இல்ல..
ஹலோ சார் துர உன் சட்ட கற என் கிட்ட வர  உட்டான் பார் அற..
பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கும் ஒதுங்கினது..
அனுபவ பாடம் படிச்சோம் அதனால் வாழ்வில் தோல்வி இல்லை..
ஒருமா காணி மா காணி..
ஒருமா காணி மா காணி..
இருமா காணி அரைக்கா..
இருமா காணி அரைக்கா..
மும்மா காணி முண்டானி..
மும்மா காணி முண்டானி..
நாமா காணி கா..
நாமா காணி கா..

எம்டன் போட்ட குண்ட போல வறும சில நேரம்
பதுங்கி பாஞ்சி அடிக்கும் போதும் பயமில்ல..
தலை சாய்ஞ்சு போனாலும் தன்மானம் சாயாது..
மண்ணோட ஈரம் போல வாழ்வோம்..

அட போயா தள்ளி போயா வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா..
வாயா வாயா ஓ..ஓ..ஓ..

மேகமே ஓ மேகமே 
உன் மழையில் கொஞ்சம் நனைவோமே..
மாலையில் அந்தி மாலையில் 
எங்க மனச உனக்கு தந்தோமே..