USILAMPATTI PENKUTTI
உசிலம்பட்டி பெண்குட்டி
Movie: Gentleman
Singers: Shahul hameed, Swarnalatha
Music director: A.R.Rahman
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு..
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு..
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவளே மெதுவாக செல்லேன்டி..
உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி குறி போட்டு வந்தேன்டி..
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு..
உசுல உசுல..உசுலம்பட்டி..
உசுல உசுல..உசுலம்பட்டி..
ஆண்: கண்டமனூர் மை தாரேன்..
கண்ணுல வச்சா ஆகாதா..
பெண்: மைய வைக்கும் சாக்க வச்சு..
கைய வைப்ப தெரியாதா..
ஆண்: அலங்காநல்லூர் ஜல்லிகட்டு..
சேர்ந்து போனால் ஆகாதா..
பெண்: மாடு புடிச்சு முடிச்ச கையில்..
மயில புடிப்ப தெரியாதா..
ஆண்: மயிலே மயிலே..இறகொன்னு போடு..
பெண்: வானம் விழுந்தா அதுவும் போடும்..
ஆண்: இறகு எதுக்கடி தோகையே கிடைக்கும் அதுக்கும் காலம் வரும்..
பெண்: உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி..
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி..
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள துருவி தான் கேட்காதே..
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவி தான் பார்க்காதே..
ஆண்: வெடல பொண்ணு நுனி நாக்கு..
வெத்தலையாலே செவந்திருக்கு..
பெண்: வேப்ப மரத்து கிளி மூக்கு..
வெத்தல போட்டா செவந்திருக்கு..
ஆண்: இடுப்பு சேலை இடைவெளியில்..
எனக்கு மட்டும் இடமிருக்கு..
பெண்: ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிபட்டி மடமிருக்கு..
ஆண்: தணியும் தணியும்..தானா தணியும்..
பெண்: தடியால் அடிச்சா கொடியா மலரும்..
ஆண்: மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது அது தான் பெண்ணின் குணம்..
ஆண்: உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு..
பெண்: உசிலம்பட்டி பெண்குட்டி முத்துபேச்சு..
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத்தாச்சி..
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள துருவி தான் கேட்காதே..
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு உருவி தான் பார்க்காதே..
.......................
Songs lyrics from Gentleman movie: