EN VEETU THOTTATHIL
என் வீட்டு தோட்டத்தில்
Movie: Gentleman
Singers: S.P.Balasubramaniam, sujatha mohan
Music director: A.R.Rahman
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்..
என் நெஞ்சை சொல்லுமே..
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்..
என் நெஞ்சை சொல்லுமே..
ஆண்: வாய் பாட்டு பாடும் பெண்ணே மௌனங்கள் கூடாது..
வாய் பூட்டு சட்டம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது..
பெண்: வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது..
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கே கேட்காது..
ஆண்: ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது..
பெண்: ஆளான பின்னாலே அல்லிப்பூ மூடாது..
ஆண்: ஆசை துடிக்கின்றதோ..
உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டு பார்..
என் பேர் சொல்லுமே..
உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டு பார்..
என் பேர் சொல்லுமே..
பெண்: சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே..
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே..
ஆண்: சொல்லுக்கும் அர்த்தத்துக்கும் தூரங்கள் கிடையாது..
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது..
பெண்: எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது..
ஆண்: எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது..
பெண்: ம்ம் ..அனுபவமோ..
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்..
என் நெஞ்சை சொல்லுமே..
ஆண்: உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டு பார்..
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்..
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டு பார்..
என் பேர் சொல்லுமே..
.......................
Songs lyrics from Gentleman movie: