PIRAI THEDUM IRAVILE

 பிறை தேடும் இரவிலே

Movie: Mayakkam enna

Singers: Saindhavi, G.V.Prakash kumar 

Music director: G.V.Prakash kumar 

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்..
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா..

பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்..
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா..
இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா..

ஆண்: உனக்கென மட்டும் வாழும் இதயமடி..
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி..

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்..
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா..

பெண்: அழுதால் உன் பார்வையும்..
அயர்ந்தால் உன் கால்களும்..
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா..
நிழல் தேடிடும் ஆண்மையும்..
நிஜம் தேடிடும் பெண்மையும்..
ஒரு போர்வையில் வாழும் இன்பம்  தெய்வம் தந்த சொந்தமா..

ஆண்: என் ஆயுள் ரேகை நீயடி..
என் ஆணி வேரடி..
சுமை தாங்கும் எந்தன் கண்மணி..
எனை சுடும் பனி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி..
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி..

பெண்: பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்..
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா..

பெண்: விழியின் அந்த தேடலும்..
அலையும் உந்தன் நெஞ்சமும்..
புரிந்தாலே போதுமே..
ஏழு ஜென்மம் தாங்குவேன்..
அனல் மேலே வாழ்கிறாய்..
நதி போலே பாய்கிறாய்..
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே..

ஆண்: இதை காதல் என்று சொல்வதா..
நிழல் காய்ந்து கொல்வதா..
தினம் கொல்லும் இந்த பூமியில்..
நீ வரம் தரும் இடம்..

.....................

Songs lyrics from Mayakkam yenna movie: