NAAN SONNADHUM MAZHAI VANDHUCHA
நான் சொன்னதும் மழை வந்துச்சா
Movie: Mayakkam enna
Singers: Naresh iyer, Saindhavi
Music director: G.V.Prakash kumar
ஆண்: நான் சொன்னதும் மழ வந்துச்சா..
நான் சொல்லல வெயில் வந்துச்சா..
அடி ரெண்டுமே எதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி..
என் கண்ணுல பொய் இருக்கா..
உன் கண்ணோட மை கிறுக்கா..
அடி கள்ளியே அறிவிருக்கா..
என் மூச்சு நின்னு போச்சு..
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா..
காட்டோடு காடாக கட்டி போட்டியா..
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது..
என் பேச்செல்லாம் நின்னு போயி மூள சுத்துது..
நான் சொன்னதும் மழ வந்துச்சா..
நான் சொல்லல வெயில் வந்துச்சா..
அடி ரெண்டுமே எதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி..
கருவாட்டு குழம்பா நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்துச்சா..
உன்ன தூக்கி போக தான் வருவேனின்னு கிளி வந்து பதில் சொல்லிச்சா..
கருநாக்குக்கார புள்ள கருப்பட்டி நிறத்து முல்ல..
எடுபட்ட நெனைப்பு தொல்ல நீ களவாணி..
கருவாட்டு குழம்பா நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
நான் சொன்னதும் மழ வந்துச்சா..
நான் சொல்லல வெயில் வந்துச்சா..
அடி ரெண்டுமே எதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி..
பெண்: ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா..
எங்காடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா..
ஆண்: அடி போடி போடி போடி முட்ட கண்ணி கட்டம் கட்டி பாஞ்சேன்..
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவில தீ மிதிச்சேன்..
கண்ணாடி வளையல் தாரேன்..
காதுக்கு ஜிமிக்கி தாரேன்..
கழுத்துக்கு தாலி தாரேன் நீ வரியாடி..
கருவாட்டு குழம்பா.. நீயும்..ருசி ஏத்துற..
நான் சொன்னதும் மழ வந்துச்சா..
நான் சொல்லல வெயில் வந்துச்சா..
அடி ரெண்டுமே எதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி..
என் கண்ணுல பொய் இருக்கா..
உன் கண்ணோட மை கிறுக்கா..
அடி கள்ளியே அறிவிருக்கா..
என் மூச்சு நின்னு போச்சு..
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா..
காட்டோடு காடாக கட்டி போட்டியா..
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது..
என் பேச்செல்லாம் நின்னு போயி மூள சுத்துது..
.....................
Songs lyrics from Mayakkam yenna movie:
