PAARTHU PAARTHU KANGAL POORTHIRUNDHEN-FEMALE

பார்த்து பார்த்து கண்கள்

Movie:  Nee varuvai ena

Singers: K.S.Chithra 

Music director: S.A.Rajkumar 

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என..
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என..
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்..
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்..
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்..
வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்..

நீ வருவாய் என..
நீ வருவாய் என..

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என..
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என..

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்..
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகியாகி விட்டேன்..
கவிதை நூலோடு கோல புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்..
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்..
ஒரு காகம் காவென கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்..

நீ வருவாய் என..
நீ வருவாய் என..

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என..
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என..

எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை.. 
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை..
இமைகள் என்னோடு சண்டை போடுதே எதிரில் வந்தால் என்ன..
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன் வெளிச்சம் தந்தால் என்ன..
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து இரு விழிகள் தேய்கிறேன்..