ORU DEVATHAI VANDHUVITTAL-FEMALE

 

ஒரு தேவதை வந்துவிட்டாள்




Movie:  Nee varuvai ena

Singers: K.S.Chithra 

Music director: S.A.Rajkumar 


ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க..
நூலில் பூவை போல சேர்ந்திருக்க..
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க..
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க..
புன்னகையில் பூப்பறிக்க..

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..

பூக்கும் செடியை எல்லாம்  சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தார்..
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையாய் மாற்றி உன் வரவை பார்த்திருந்தார்..
கண்ணுக்குள் கண்ணுக்குள்  உன்னை வைத்து..
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து ..
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்து..
உன்னிடம் உன்னிடம் தன்னை தந்து..
உன் நிழலில் வாழ்ந்திருக்க..
உன் உயிரில் சேர்ந்திருக்க..

ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே..

கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்க சொல்லி தென்றல் என்னும் பாட்டிசைப்பார்..
தேகம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து மெத்தை செய்து பூ விரிப்பார்..
வானத்து வானத்து நட்சத்திரம்..
வாசலில் வாசலில் புள்ளி வைக்க..
வானவில் வானவில் கொண்டு வந்து..
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க..
உள்ளங்கையில் பச்சை குத்தி உன் பெயரை உச்சரிக்க..

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க..
நூலில் பூவை போல சேர்ந்திருக்க..
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க..
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க..
புன்னகையில் பூப்பறிக்க..

தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத்தேரிலே..





..........................





Songs lyrics from Nee varuvai ena movie: