ADHIKAALAIYIL SEVALAI EZHUPI

 அதிகாலையில் சேவலை எழுப்பி

Movie:  Nee varuvai ena

Singers: Unni krishnan,  sujatha 

Music director: S.A.Rajkumar 

ஆண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்..

அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்..
இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை..
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை..
என் தாமரை பூக்கவில்லை..

அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்..

மின்னல்கள் ரெண்டு மோத கண்டேன்..
விண்மீன்கள் பூக்கள் தூவ கண்டேன்..
ஆழ்வார்கள் போற்றி பாட கண்டேன்..
ஸ்ரீரங்கன் மார்பில் சேர கண்டேன்..

பெண்: காலை பொழுதில் காதல் கூடாது.. கூடாது..

ஆண்: காதல் பொழுதில் வேலை கூடாது.. கூடாது கூடாது..
ஆசையில் நெஞ்சம் ஏங்க கூடாது.. கூடாது..

பெண்: அன்பின் எல்லை தாண்ட கூடாது.. கூடாது கூடாது..

ஆண்: கோவை கனி இதழ் மூடக்கூடாது..
கொத்தும் கிளியை திட்ட கூடாது..
அன்பே என்னை கனவில் கூட மறக்க கூடாது..

பெண்: உறங்கும் போதும் உயிரே உன்னை பிரிய கூடாது..

ஆண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்..

ஆண்: மாலை தென்றல் வீசக்கூடாது.. கூடாது..

பெண்: மாநில செய்திகள் கேட்க கூடாது.. கூடாது கூடாது..
சூரியன் மேற்கை பார்க்க கூடாது.. கூடாது..

ஆண்: சூரிய காந்தியும் பார்க்க கூடாது.. கூடாது கூடாது..

பெண்: ஆலய சங்கொலி ஊத கூடாது..
 அஞ்சு மணிப்பூ பூக்க கூடாது..
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது..

ஆண்: இரவு என்ற சொல்லே தமிழில் இருக்க கூடாது..

பெண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்..
என் வாசலில் கோலத்தை வரைந்தது யார்..
என் வளையொலி கொலுசுகள் திருடியதார்..
இரு விழிகளில் கலந்தது யார்..

ஆண்: அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று கெஞ்சியவன்..
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சியவன்..