VAAZHA VAIKUM KADHALUKU JAY
வாழ வைக்கும் காதலுக்கு ஜே
Movie: Apoorva sagodharargal
Singers: S.P.Balasubramaniam , S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
பெண்: தூது விட்ட கண்கள் உன்னை தேடுதே..
அம்பு விட்ட காமனுக்கும் ஜே..
ஆண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே..
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே..
பெண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
பெண்: ஆ...நாணம் என்னை விட்டுச்சே..
மோகம் என்னை தொட்டுச்சே..
கையணைக்க கையணைக்க..
ஆண்: கன்னி விழி பட்டுச்சே..
காளை மனம் கெட்டுச்சே..
மெய்யணைக்க மெய்யணைக்க..
பெண்: கல்லோடும் முள்ளோடும் தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள..
அம்மம்மா என்னென்ன ரசிச்சேன்..
ஆண்: முன்னாலும் பின்னாலும் முத்தாடும் இந்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்..
பெண்: பார்வை தன்னில் நாளும் நீந்தும் பாவை ஒரு மீனாச்சே..
ஆண்: தேகம் தனை நாளும் மூட ஆடை இந்த ஆணாச்சே..
பெண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே..
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே..
ஆண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
பெண்: தூது விட்ட கண்கள் உன்னை தேடுதே..
அம்பு விட்ட காமனுக்கும் ஜே..
ஆண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே..
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே..
பெண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
ஆண்: தேன் மழையும் கொட்டுச்சே..
தேகம் எங்கும் பட்டுச்சே..
வெட்கம் விட்டு பக்கம் நிற்க..
பெண்: பெண் மனது அஞ்சிச்சே..
போதும் என்று கெஞ்சிச்சே..
வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச..
ஆண்: உன் மடி பொன் மடி மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன
சொல்லடி சொல்லடி சிந்திச்ச..
பெண்: பொன்மகள் பூமகள் என் மனம் எந்நாளும் தஞ்சம் என்று
உன்னிடம் உன்னிடம் வந்துச்சே..
ஆண்: வாடை என நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே..
பெண்: வாரி எனை நானும் தந்தேன் வாலிபம் தான் மேலாச்சே..
ஆண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே..
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே..
பெண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
ஆண்: தூது விட்ட கண்கள் உன்னை தேடுதே..
அம்பு விட்ட காமனுக்கும் ஜே..
பெண்: வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே..
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே..
ஆண்: வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
பெண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
வாழ வைக்கும் காதலுக்கு ஜே..
ஆண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே..
........................
Songs lyrics from Apoorva sagodharargal movie: