RAJA KAIYA VACHA
ராஜா கைய வச்சா
Movie: Apoorva sagodharargal
Singers: Kamalhassan
Music director: Ilayaraja
ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்ல..
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேல தான்....
இந்த ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
ராஜா கைய வெச்சா..
கட்ட வண்டி என்கிட்ட காரா மாறும்டா..
ஓட்டவண்டி கைபட்டா ஜோரா ஓடும்டா..
என்ன பத்தி யாருன்னு ஊர கேளுப்பா..
இல்லயினா உன் வீட்டு காரை கேளுப்பா..
சரக்கிருக்கு..பபபப்பா..
முறுக்கிருக்கு..பபபப்பபா..
தலைகிறுக்கு..பபபப்பபா..
அது எனக்கெதுக்கு..பபபப்பபா..
வாழ்ந்திட தான் பொறந்தாச்சு..
வாசல்கள் தான் தொறந்தாச்சு..
பாடுங்கடா இசைபாட்டு..
பாடுங்கடா நடை போட்டு..
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேல தான்....
இந்த ராஜா கைய வச்சா..
ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேல தான்..தரரம்பம்பம்..
இந்த ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
ராஜா கைய வெச்சா..
கன்னி பொண்ணா நெனச்சு கார தொடணும்..
கட்டினவன் விரல்தான் மேல படணும்..
கண்டவங்க எடுத்தா கெட்டு போயிடும்..
அக்கு அக்கா அழகு விட்டு போயிடும்..
தெரிஞ்சவன்தான்..பபபப்பபா..
ஓட்டிடணும்..பபபப்பபா..
திறமை எல்லாம் ..பபபப்பபா..
அவன் காட்டிடணும்..பபபப்பபா..
ஓரிடத்தில் உருவாகி
வேறிடத்தில் விலை போகும்
கார்களை போல் பெண் இனமும்
கொண்டவனை போய் சேரும்..
வேகம் கொண்டாட காரும் பெண் போல தேகம் சூடாகுமே....
இந்த ராஜா கைய வெச்சா..
ராஜா கைய வெச்சா..
ராங்கா போனதில்ல..
ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேல தான்....
இந்த ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல..
ராஜா கைய வெச்சா..
.........................
Songs lyrics from Apoorva sagodharargal movie: