VAA VAA ANBE ANBE
வா வா அன்பே அன்பே
Movie: Agni natchathiram
Singers: K.J.Yesudas, K.S.Chithra
Music director: Ilayaraja
ஆண்: வா வா அன்பே அன்பே..
காதல் நெஞ்சே நெஞ்சே..
உன் வண்ணம் உன் எண்ணம்..
எல்லாமே என் சொந்தம்..
இதயம் முழுதும் எனது வசம்..
பெண்: வா வா அன்பே அன்பே..
காதல் நெஞ்சே நெஞ்சே..
ஆண்: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்..
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி..
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி..
பெண்: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்..
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்..
ஆண்: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே..
பெண்: நீ இன்றி ஏது பூ வைத்த மானே..
ஆண்: இதயம் முழுதும் எனது வசம்..
பெண்: வா வா அன்பே அன்பே..
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே..
பெண்: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்..
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்..
ஆண்: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது ..
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது..
பெண்: உன் தோளில் தானே பூமாலை நானே..
ஆண்: சூடாமல் போனால் வாடாதோ மானே..
பெண்: இதயம் முழுதும் எனது வசம்..
ஆண்: வா வா அன்பே அன்பே..
பெண்: காதல் நெஞ்சே நெஞ்சே..
ஆண்: உன் வண்ணம் உன் எண்ணம்..
பெண்: எல்லாமே என் சொந்தம்..
ஆண்: இதயம் முழுதும் எனது வசம்..
பெண்: வா வா அன்பே அன்பே..
ஆண்: காதல் நெஞ்சே நெஞ்சே..
.......................
Songs lyrics from Agni natchathiram movie: