THOONGADHA VIZHIGAL RENDU

 தூங்காத விழிகள் ரெண்டு



Movie: Agni natchathiram 

Singers: K.J.Yesudas,  S.Janaki 

Music director: Ilayaraja 


பெண்: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..

தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..

ஆண்: மாமர இலை மேலே..ஆ...
மாமர இலை மேலே மார்கழி பனி போலே..
பூமகள் மடி மீது நான் தூங்கவோ..
மாமர இலை மேலே மார்கழி பனி போலே..
பூமகள் மடி மீது நான் தூங்கவோ..

பெண்: ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்..
ராஜனை கையேந்தி தாலாட்டவோ..

ஆண்: நாளும் நாளும் ராகம் தாளம்..
சேரும் நேரம் தீரும் பாரம்..

பெண்: ஆ..ஆ.ஆ.ஆ..

ஆண்: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..

தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..

பெண்: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக..
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ..

ஆண்: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்..
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ..

பெண்: மாதுளம் கனியாட மலராட கொடியாட..
மாருதம் உறவாடும் கலை என்னவோ..

ஆண்: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற..
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ..

பெண்: மேலும் மேலும் மோகம் கூடும்..

ஆண்: தேகம் யாவும் கீதம் பாடும்..

பெண்: ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண்: ஆ..ஆஆ..

பெண்: தூங்காத விழிகள் ரெண்டு..

ஆண்:உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..

பெண்: செம் பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்..

ஆண்: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..

ஆ&பெ: தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..