SUNDARI KANNAL ORU SETHI
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
Movie: Thalapathi
Singers: S.P.Balasubramaniam , S.Janaki
Music director: Ilayaraja
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
ஆண்: நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா..
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா..
ஆண்: ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்..
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்..
பெண்: தேனிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை..
ஆண்: வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை..
பெண்: என்னை தான் அன்பே மறந்தாயோ..
ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே..
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்..
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்..
ஆண்: ஆ..மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்..
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்..
பெண்: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்..
ஆண்: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்..
பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்..
ஆண்: வருவேன் அந்நாள் வர கூடும்..
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
ஆண்: நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி கண்ணால் ஒரு சேதி..
சொல்லடி இந்நாள் நல்ல தேதி..
பெண்: என்னையே தந்தேன் உனக்காக..
ஜென்மமே கொண்டேன் அதற்காக..
...........................
Songs lyrics from Thalapathi movie: