KAATUKUYILU MANASUKKULLE

 காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

Movie: Thalapathi 

Singers: S.P.Balasubramaniam,  K.J.Yesudas 

Music director: Ilayaraja 

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்..
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்..

எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே..
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே..ஹேய்..

போடா எல்லாம் விட்டு தள்ளு 
பழசை எல்லாம் சுட்டு தள்ளு 
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணி கொள்ளடா டோய்..

பயணம் எங்கே போனால் என்ன 
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்..

ஊதக்காத்து வீச..
உடம்புக்குள்ள கூச..
குப்பக்கூலம் பத்த வெச்சு காயலாம்..

தை பொறக்கும் நாளை..
விடியும் நல்ல வேளை..
பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்..

அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹேய்..

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்..
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்..

எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே..

காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்..
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்..

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலை பட்ட ஜென்மம் நான் இல்லே..

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே..

உள்ள மட்டும் நானே உசுர கூடத்தானே 
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்..

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு..
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்..

சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய்..