ADI RAAKAMMA KAIYA THATTU
ராக்கம்மா கைய தட்டு
Movie: Thalapathi
Singers: S.P.Balasubramaniam, Swarnalatha
Music director: Ilayaraja
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு..
புது ராகத்தில் மெட்டு கட்டு..
அடி ராக்கோழி மேளங்கொட்டு.. ஜகஜகஜக ஜா..
இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு.. ஜகஜகஜக ஜகஜகஜக..
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு..
புது ரோசாப்பூ மாலை கட்டு..
அட ராசாத்தி தோளில் இட்டு.. ஜகஜகஜக ஜா..
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு.. ஜகஜகஜக ஜகஜகஜக..
ஆண்: ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது..
இத கட்டி போட ஒரு சூரன் ஏது..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு..
புது ராகத்தில் மெட்டு கட்டு..
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு..
புது ரோசாப்பூ மாலை கட்டு..
ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு..
பெண்: அட ஊரு சனம் யாவும் ஒத்துமையா சேரும்
வம்பும் தும்பும் இல்ல நீ பாரு..
ஆண்: மத்தள சத்தம் எட்டு ஊரு தான்
எட்டணும் தம்பி அடி ஜோராக..
வைக்கிற பாணம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக..
அட தம்பட்டம் தாள தான் தட்டிபாடு..
ஆண்: முத்தம்மா முத்தம் சிந்து..
ஜகஜகஜக ஜா..
பனி முத்து போல் நித்தம் வந்து..
ஜகஜகஜக ஜகஜகஜக..
பெண்: அட மாமா நீ ஜல்லிக்கட்டு..
ஜகஜகஜக ஜா..
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு..
ஜகஜகஜக ஜகஜகஜக..
ஆண்: அட பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு..
உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப்போரு..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு..
புது ராகத்தில் மெட்டு கட்டு..
பெண்: அட மாமா நீ ஜல்லிக்கட்டு..
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு..
ஆண்: வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி விளக்கேத்து..
பெண்: அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும் பூ பூத்து..
ஆண்: நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே..
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா..
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்..
உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா..
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்..
ஆண்: கண்ணம்மா கன்னம் தொட்டு..
சுகம் காட்டம்மா சின்ன முத்து..
பெண்: பூமாலை வெச்சுபுட்டு..
புது பாட்டெல்லாம் வெளுத்து கட்டு..
பெண்: குவித்த புருவமும் கோவை செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுதுடன் எடுத்த பொற்பாதமும்
பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதும் இம்மானிலத்தே..
மனித்த பிறவியும் வேண்டுவதும் இம்மானிலத்தே..
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு..
புது ராகத்தில் மெட்டு கட்டு..
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு..
புது ரோசாப்பூ மாலை கட்டு..
ஆண்: அட உன்ன போல இங்கு நானும் தான்டி..
அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஜாங்குஜக்கு ஜஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா..
ஆண்: அடி ராக்கம்மா கைய தட்டு..
புது ராகத்தில் மெட்டு கட்டு..
பெண்: அட ராசாவே பந்தல் நட்டு..
புது ரோசாப்பூ மாலை கட்டு..
...........................
Songs lyrics from Thalapathi movie: