THALAIVA THALAIVA
தலைவா தலைவா
Movie: Thalaiva
Singers: Haricharan, Pooja vaidyanath, Zia ulhaq
Music director: G.V.Prakash kumar
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
ஆண்: தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா..
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா..
பெண்: எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்..
பின்னால் நிழலாய் வருவோம்..
ஆண்: தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்..
விழுந்தால் விதையாய் எழுவோம்..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
ஓஓ ஓஓ ஓ ஓ ஓ.தலைவா தலைவா.. தலைவா தலைவா..
தலைவா தலைவா தலைவா தலைவா..
தலைவா....
ஆண்: எதிரிகள் எதிரிகள் தம் தம்..
அலறிட அலறிட தம் தம்..
அனலென புறப்படு தம் தம் தோழா..
கெட்டதை கண்டதும் தம் தம்..
பட்டென சுட்டிட தம் தம்..
கட்டளை இட்டிடு தம் தம் தோழா..
பெண்: பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்..
வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்..
எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே..
வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்..
ஆண்: உன் இரத்தம் என் இரத்தம் வேறே இல்லை..
உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை..
தலைவா தலைவா உயிர் நீ தலைவா..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
ஆண்: ஒரு விழி எரிமலை தம் தம்..
மறு விழி பனிமலை தம் தம்..
இவனுக்கு நிகர் இல்லை தம் தம் தோழா..
நிலமது அதிர்ந்திட தம் தம்..
கடலது பொங்கிட தம் தம்..
கர்ஜனை புரிவான் தம் தம் தோழா..
பெண்: அச்சங்கள் உனை கண்டு அச்ச பட..
உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ..
பத்தோடு பதினொன்று நீயில்லையே..
பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி..
ஆண்: ஊர் எங்கும் சந்தோஷம் விளையாடுதே..
உன்னாலே அன்பெங்கும் அலை பாயுதே..
தலைவா தலைவா உயிர் நீ தலைவா..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
ஆண்: தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா..
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா..
பெண்: எழுவோம் எழுவோம் உன்னால் எழுவோம்..
பின்னால் நிழலாய் வருவோம்..
தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்..
விழுந்தால் விதையாய் எழுவோம்..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
தளபதி தளபதி எங்கள் தளபதி..
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி..
......................
Songs lyrics from Thalaiva movie: