YAAR INDHA SAALAI ORAM
யார் இந்த சாலை ஓரம்
Movie: Thalaiva
Singers: G.V.Prakash kumar, Saindhavi
Music director: G.V.Prakash kumar
ஆண்: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..
பெண்: யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..
ஆண்: நகராமல் இந்த நொடி நீள..
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..
பெண்: குளிராலும் கொஞ்சம் அனலாலும்..
இந்த நெருக்கம் தான் கொல்லுதே..
ஆண்: எந்தன் நாளானது..இன்று வேறானது..
வண்ணம் நூறானது வானிலே..
யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..
ஆண்: தீர தீர ஆசை யாவும் பேசலாம்..
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்..
பெண்: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்..
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்..
ஆண்: என்னாகிறேன்..இன்று ஏதாகிறேன்..
பெண்: எதிர்க்காற்றிலே சாயும் குடையாகிறேன்..
ஆண்: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது..
அது பறந்தோடுது வானிலே..
பெண்: யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..
ஆண்: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே..
அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே..
பெண்: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே..
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே..
ஆண்: கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி..
பெண்: என் பாதையில் இன்று உன் காலடி..
ஆண்: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்..
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி..
ஆண்: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது..
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது..
பெண்: யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது..
இன்று பேசாமல் கண்கள் பேசுது..
ஆண்: நகராமல் இந்த நொடி நீள..
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே..
பெண்: குளிராலும் கொஞ்சம் அனலாலும்..
இந்த நெருக்கம் தான் கொல்லுதே..
ஆண்: எந்தன் நாளானது..இன்று வேறானது..
வண்ணம் நூறானது வானிலே..
......................
Songs lyrics from Thalaiva movie:
