MADURAIKU POGADHADI

 மதுரைக்கு போகாதடி





Movie: Azhagiya tamizh magan

Singers: Benny dayal,  Darshana, Archith

Music director: A.R.Rahman 


பெண்: கற்பூர கன்னிகையே வாராய்..
நீ அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்..
நீ வங்காள மகராணியே..
வலது கால் எடுத்து வாராய் நீயே..
நீ வந்த இடம் வளமாக..
சென்ற இடம் வளமாக..
சேர்ந்த இடம் சுகமாக வாழ போற..

ஆண்:  மதுரைக்கு போகாதடி..
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..
தஞ்சாவூர் போகாதடி..
தல ஆட்டாம பொம்ம நிக்கும்..
தூத்துகுடி போனா சில கப்பல் கர தட்டும்..
கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும்..

அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..
அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..

பெண்: கற்பூர கன்னிகையே வாராய்..
நீ அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்..
நீ வங்காள மகராணியே..
வலது கால் எடுத்து வாராய் நீயே..

ஆண்: அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத..
அத்த மகன் வாரான்டி அழைச்சு போக..

ஆண்: மதுரைக்கு போகாதடி..
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..

சித்திரைனா வெயில் அடிக்கும்..
கார்த்திகை னா மழையடிக்கும்..
அடார் புடார் கடார் கடார் மாப்பிள்ளைதான் தங்கம்..
ஆடியின்னா காத்தடிக்கும்..
மார்கழினா ஹாஹாஹாஹா..
டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம்..

ஆண் :ஓ..ஓஓ..மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வெச்சா..
ஓ தேரா தேரா இவ வாரா வாரா..

பெண்: ஓ..காட்டு குயில கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே..
ஓ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா..

ஆண்: நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் 
சர்க்கரையா இருப்பாளே ஆசையாலே..

மதுரைக்கு போகாதடி..
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..

அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..

பெண்: மருமக மருமக வந்தாச்சம்மா..
இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா..

தமிழ்நாட்டு மன்மதனே வாராய்..
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்..
நீ இந்திர மகராஜனே..
வெற்றி மாலைக்கென பிறந்தவனே..
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக..
சொன்னதெல்லாம் நிஜமாக..
கன்னி நிலா வந்திருச்சு கனவு காண..

பெண்: ஓ..ஓ..கெட்டி மேளம் நாதஸ்வரம்..
அத சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்..
டும் டும் டும் டும் டுடுடுடு டும் டும் டும் டும்..

ஆண்: ஓ..மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு..
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு..
பெண்: டும் டும் டும் டும் 
ஆண்: டும் டும் டும் டும் டுடுடுடு டும் டும் டும் டும்..

பெண்: சந்திரனில் ஒரு பாதி இந்திரனில் ஒரு பாதி..
சுந்தரனே என் ஜோடி ஆனதென்ன..

ஆண்:  மதுரைக்கு போகாதடி..
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்..

பெண்: மதுரைக்கு போகமாட்டேன்..
என் மல்லிப்பூ உன் கையில..

ஆண்: தஞ்சாவூர் போகாதடி..
தல ஆட்டாம பொம்ம நிக்கும்..

பெண்: எங்கும் போக மாட்டேன்..
உன் முன்னால தான் நிப்பேன்..
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்..

அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..
அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..
அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..
அசருது அசருது ஊர் மொத்தமா..
அது என்ன அது என்ன உன் குத்தமா..