YE ASAINDHADUM
ஏ அசைந்தாடும்
Movie: Parvai ondre podhume
Singers: P.Unni krishnan, S.Janaki
Music director: Bharani
ஆண்: ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா..
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா..
பெண்: கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா..
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா..

ஆண்: ஏ தீப்போன்ற உன் மூச்சோடு..ம்ம்ம்..என் தோள் சேரு..
உற்சவம் போது..ஜஜஜம்.. ஜஜஜம்..உச்சியை கோது
பெண்: என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர் பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம் ஜஜஜம் பொய்கையில் நீந்து..
ஆண்: நான் வேர் வேராய் அட வேர்த்தேனே..
ஒரு பால் பார்வை உனை பார்த்தேனே..
பெண்: சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க..
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க..
ஆண்: ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா..
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா..
பெண்: வீண் ஆராய்ச்சி நீ பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே..
கோப்புழில் தாகம் ஜஜஜம் ஜஜஜம் கொங்கைகள் வேகம்..
ஆண்: உன் கண் கொண்டு என்னை கொய்யாதே..
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம் ஜஜஜம் வித்தைகள் காட்டு..
பெண்: நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே..
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே..
ஆண்: பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம்..
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்..
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்..
ஆண்: ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா..
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா..
பெண்: கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா..
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா..
ஆண்: ஏ அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா..
ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா..
.......................
Songs lyrics from Paarvai ondre podhume movie: