THIRUMBA THIRUMBA PAARTHU PAARTHU
திரும்ப திரும்ப
Movie: Parvai ondre podhume
Singers: P.Unni krishnan, Harini
Music director: Bharani
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..
திரும்ப திரும்ப பேசி பேசி..
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா..
பெண்: திரும்பத் திரும்ப கடிதம் போட்டு..
திரும்பத் திரும்ப இதயம் கேட்டு..
திரும்பத் திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா..
ஆண் : இமைக்கும் போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்..
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்..
பெண்: உயிரைக் கொண்டு உன்னை மூடினேன்..ஆ..
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..
திரும்ப திரும்ப பேசி பேசி..
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா..
ஆண்: உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ..
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கிக் கொண்டதோ..
வாங்கிக்கொண்ட சேலை தான் வானவில்லும் ஆனதோ..
பெண் : முத்தம் வைத்துக்கொள்வதை வானம் எண்ண எண்ணுதோ..
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ..
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ..
ஆண்: காதலித்துப் பார்க்கையில் இதயம் நின்று போகுமே..
பெண்: இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே..
ஆண் : பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே..ஆ...
பெண்: திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..
திரும்ப திரும்ப பேசி பேசி..
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா..
பெண்: கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்..
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்..
இந்த மென்மை ஆண்மையே உன்னை என்னை ஈர்த்தது..
ஆண்: மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்..
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்..
இந்தத் தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது..
பெண்: இதயத்துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு எண்பது..
ஆண்: உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது..
பெண்: வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது..
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..
திரும்ப திரும்ப பேசி பேசி..
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா..
பெண்: திரும்பத் திரும்ப கடிதம் போட்டு..
திரும்பத் திரும்ப இதயம் கேட்டு..
திரும்பத் திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா..
ஆண் : இமைக்கும் போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்..
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்..
பெண்: உயிரைக் கொண்டு உன்னை மூடினேன்..ஆ..
ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து..
திரும்ப திரும்ப பேசி பேசி..
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா..
.......................
Songs lyrics from Paarvai ondre podhume movie: