THEDUM KAN PAARVAI
தேடும் கண் பார்வை
Movie: Mella thirandhadhu kadhavu
Singers: S.P.Balasubramaniam, S.Janaki
Music director: M.S.Viswanathan
ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க..
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க..
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ..
வெறும் மாயமானதோ..ஓ..
பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்..
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்..
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு..
வரும் பாதை பார்த்திரு..
ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க..
ஆண்: காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்..
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்..
பெண்: வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா..
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா..
ஆண்: கனிவாய் மலரே..
உயிர் வாடும் போது ஊடல் என்ன பாவம் அல்லவா..
பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்..
ஆண்: தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே..
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ..
பெண்: காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே..
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே..
ஆண்: பிரிந்தோம் இணைவோம்..
பெண்: இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா..
ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க..
பெண்: தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்..
ஆண்: சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ..
பெண்: வெறும் மாயமாகுமோ..
ஆண்: தேடும் கண் பார்வை தவிக்க..
பெண்: துடிக்க..
.......................
Songs lyrics from Mella thirandhadhu kadhavu movie: